Posts

Showing posts from October, 2025

மின்னல் மறைந்த பின்....

ராகவன் அப்போது தான் கண் விழித்தார். முதலில் அவருக்கு ஒன்றும் புரியவில்லை. பச்சைப்பசேலாக இருந்த ஒரு புல்வெளியில் தான் நிற்பதைக் கண்டார். தூரத்தே அங்காங்கே மரங்களும் தென்பட்டன. சிலர் தன்னை நோக்கி வருவதையும் கண்டார். அவர்கள் தனக்குத் தெரிந்தவர்களா என்று யோசித்தார். அவர்கள் அவரை நெருங்கி வருகையில் அவர்களின் முகங்களைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. அவர்களில் ஒருவர் தான் கொழும்பில் இருந்த போது தன் அயல் வீட்டிலிருந்த முத்துக்கிருஷ்ணனைப் போலிருந்தார். அருகில் வந்தவர்கள் ராகவனுக்குத் தங்கள் வணக்கத்தைத் தெரிவித்தனர். அவரும் தனது வணக்கத்தைத் தெரிவித்தார். தனது அயல் வீட்டு சிநேகிதனைப் போல இருந்தவரைப் பார்த்து, "நீங்கள் முத்துக்கிருஷ்ணனா?" என வினவினார். அவர் புன்னகைத்துக் கொண்டே இவர் அருகில் வந்து, "ஆமாம் ராகவன். உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி" என்றார். ஆனால் முத்துக்கிருஷ்ணன் சற்றே இளமையாக இருப்பதாகப் பட்டது ராகவனுக்கு. தாம் கொழும்பை விட்டுக் கனடா வந்து ஏறக்குறைய இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டனவே. அப்படியென்றால் என்னைப் போல் இவரும் அல்லவா முதுமையடைந்திருக்க வேண்டும...